ஆர்.கே.சுரேஷின் அடுத்த படம் டைசன்! சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது. இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர்.கே.சுரேஷை நாயகனாக்கி ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது.
பிரமாண்டபொருட் செலவில் இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி’, ‘வேட்டைநாய்’ போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் , இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் இப்படத்தில் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள். ‘ஸ்டுடியோ 9’ தயாரிக்கிறது. இப்படத்தின் பஸ்ட் லுக் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.