கொரோனா பீதி காரணமாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சாலைகளில் தற்காலிக தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு சென்று சேர்வதில் தடைகளை ஏற்படுத்துவது வேதனையை உண்டாக்குகிறது. நாட்றம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் ஊராட்சி சார்பாக குடிநீர் விநியோகம் செய்யும் டிராக்டர்களுக்கும் வழி விட மறுத்தனர் இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தடைகள் ஏற்படுத்தக்கூடாது என்று அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்தும் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு சென்றடைவதை அரசும் அதிகாரிகளும் உறுதி செய்து இது போன்ற தடை ஏற்படுத்துபவர்களை கண்டிக்க வேண்டும்.