இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப் பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றப் பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளோம். வாழ்நாள் தடை விதித்தால் அரசியல் இருந்து குற்றச்செயல்களை குறைக்க முடியும்’ என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.