அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு

0
1946

நாட்றம்பள்ளி தாலுக்கா மல்லகுண்டா பஞ்சாயத்தில் கடந்த சில மாதங்களாக அரசு புறம்போக்கு நிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் மரம் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கடந்த ஓரு மாத காலமாக சம்பந்தப்பட்ட புறம்போக்கு இடத்தில் 200 க்கும் மேற்பட்ட மரம் நடும் குழிகளை வெட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் திடீரென்று 13.11.2019 அன்று இரவோடு இரவாக அந்த குழிகள் அடைக்கப்பட்டு அங்கே டிராக்டர் மூலம் ஏர் உழுது வைக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஊராட்சி செயலர் குமரேசன் சம்பந்தப்பட்ட இடத்தில் சென்று பார்த்து, “யார் இந்த புறம்போக்கு நிலத்தில் ஏர் உழுதது” என விசாரிக்க, பலக்கல்பாவி கிராமத்தைச் சார்ந்த பெருமாள் மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த இடத்திற்கு நாங்கள் 30 ஆண்டுகளாக அரசுக்கு பீம் செலுத்தி வருகிறோம். அதனால் இந்த இடத்தில் மரம் நட விடமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி தனி அலுவலர், கிராம ஊராட்சி கோபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பெருமாள் மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோரை கடுமையாக எச்சரித்தனர். பின்னர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகளின் மேற்பார்வையில் அப்பொழுதே மரக்கன்றுகளை நடும்படி உத்தரவிடப்பட்டது. இதன்மூலம் நில ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்படி வட்டார வளர்ச்சி அலுவலர் நமது நிருபரிடம் கூறும்போது;

இது போன்று மொத்தம் 40 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை இந்தப்பகுகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவையனைத்தும் படிப்படியாக பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

– S.மோகன், வேலூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here