சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்களை கொத்தாக அள்ளச் சொல்லியிருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்லம். இதற்காக ஒரு ரகசிய அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாராம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று நூறு நாட்கள் ஆகப்போகிறது. அதை கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை. காரணம் அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை தரும் நெருக்கடிதான். செந்தில்பாலாஜி ஒரு டீம் எம்எல்ஏக்களோடு போய் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்து விட்டு வர, மறுநாளே கே.எஸ்.தென்னரசு , ஆர்.சந்திரசேகர், கே.உமாமகேஸ்வரி , ஐ.எஸ்.இன்பதுரை, தமிழ்செல்வன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மனு கொடுத்துள்ளனர்.