இடநெருக்கடிக்கு நடுவே செயல்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

0
1132

தமிழகத்தின் 35வது மாவட்டமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டு வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 11லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் முக்கியமான அலுவலகங்களில் ஒன்றாக விளங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போதைய அவசர கதியில் தற்காலிகமாக திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள அரசு பல்துறை கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சாதாரணமாக காவல்நிலையத்திற்கு உள்ள இடவசதி கூட இல்லாமல் கடுமையான இட நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அலுவல் சார்ந்த பணிகளுக்காக வரும் பொதுமக்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்கு கூட போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. புதிய மாவட்டம் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் போதிய இடவசதி இல்லாமல் இயங்கி வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான அதிகாரிகள் பொதுமக்கள் என அதிகமான கூட்டம் வரும்போது அவர்களுடைய வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது என்பது தற்போதைய நிலையில் சவாலான காரியமாக உள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் காவலர் வீட்டு வசதிக் கழகம் திருவண்ணாமலை சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் தற்போதைய கட்டுமான வேலை முடிய இன்னும் சிலமாதங்கள் ஆகலாம்.

எனவே இந்த புதிய அலுவலக கட்டுமான வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாற்றப்படும் பட்சத்தில் இந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் என்கின்றனர் இம்மாவட்ட சமூக ஆர்வலர்கள். சமீபகாலமாக செயற்கை மணல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை ஆகியவற்றை மாவட்ட காவல்துறை கட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-S.Mohan, Natrampalli

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here