இந்தியக் கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் அப்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது ட்வீட்டில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
”இந்தியக் கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் அப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள். போர்க்கால நடவடிக்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமான நமது கடலோரக் காவல் படையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு உள்ளது. இவர்கள் தொடர்ந்து நமது கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மனித நேய நடவடிக்கைகளிலும் முன்னணியில் நின்று ஈடுபடுகின்றனர்.
-PIB