நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் …

“இந்தியாவிலேயே கோஷ்டிப் பூசல்களுக்கு பெயர்போன கட்சி திமுக தான். அவர்களுக்குள்ளாகவே ஒற்றுமை இல்லாதவர்கள் நாட்டை எப்படி வழிநடத்துவார்கள்” என்றும் வினவினார். மேலும் “தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்குகளை முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார். இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மினிகிளினிக்குகள் பத்து நாட்களுக்கு மேல் தானாகவே செயல்படாமல் போய்விடும் என்று விமர்சனம் செய்தனர். ஆனால் அவர்களின் கனவு பலிக்கவில்லை தொடர்ந்து கிராமப் பகுதி மக்களுக்கு தனது மருத்துவ சேவையை செய்து வருகின்றன. பொய்ப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவின் கனவு பலிக்காது” என்றும் கூறினார்.
முன்னதாக கூட்டத்திற்கு நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமராஜ் வரவேற்புரையாற்றினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கழக ஒருங்கிணைப்பாளர் குட்லக் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
-S.Mohan