மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மாடுகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால்,விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனேர் என்று கூறப்படுகிறது. மேலும் தனி மனி உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவசர மனு மதுரையை சேர்ந்த செல்வகோமதி என்பவர் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்பு கொண்டதையடுத்து, மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.