என் வாழ்நாளில் இதுபோன்ற ஊழல் நிறைந்த அரசை பார்த்ததில்லை: அமித்ஷா குற்றச்சாட்டு

0
1374

புதுச்சேரி: என் வாழ்நாளில் இதுபோன்ற ஊழல் நிறைந்த அரசை பார்த்ததில்லை என புதுவை காங்கிரஸ் அரசு குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

புதுவை மாநில பாஜக சார்பில் பல்வேறு துறை தொழில்வல்லுநர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. மாநில தலைவர் வி.சாமிநாதன் தலைமை தாங்கினார். தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் எந்த முன்னேறறத்தையும் அடையவில்லை. கடந்த 2014}ம் ஆண்டில் இருந்து தற்போது 3 ஆண்டுகள் வரை எவ்வாறு முன்னேறி உள்ளது என்பதை விளக்க வேண்டும். முந்தைய காங்கிரஸ் அரசில் 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. முன்பு பிரதமராக இருந்தவர் முக்கிய பிரச்னைகளில் பேசுவாரா என அனைவரும் எதிர்பார்க்கும் நிலை காணப்பட்டது. கொள்கை ரீதியாக பக்கவாதத்தால் தாக்கப்பட்ட அரசு போல் முந்தைய அரசு இருந்தது.

நமது நாட்டின் மதிப்பும் சர்வதேச அளவில் கீழிறங்கி விட்டது. வளர்ச்சிக்கான எந்த திட்டமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த சூழலில் நாட்டு மக்கள் காங்கிரஸ் அல்லாத அரசுக்கு பெரும்பான்மை பலத்தை அளித்தனர். 3 ஆண்டுகளை தற்போது மோடி அரசு நிறைவு செய்துள்ளது. ஆண்டுதோறும் அரசின் செயல்பாடு குறித்த கணக்கை மக்களிடம் சமர்ப்பிக்கிúôம்.

மோடி பொறுப்பேற்ற போது நாட்டின் பொருளாதார அளவுகோல் கீழே இறங்கி காணப்பட்டது. 3 ஆண்டுகளில் உலகத்திலேயே துரிதமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம். பங்குச் சந்தை சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது.

மாநில அரசாங்கத்தின் வருவாய் அதிகரித்த பிறகும் வருவாய் சரிவு 3 சதவீதமாக உள்ளது. இந்த அரசின் செயல்பாடு என்று ஒன்றுமே இல்லை. எதிர்க்கட்சியினர் கூட பாஜக அரசு மீது எந்த புகாரும் கூற முடியாது. கொள்கை இல்லாத அரசு போல் தற்போதுள்ள அரசு இல்லை. சட்டத்தின் வரையறைகளுக்குட்பட்டு இயங்கி வருகிறது.

பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின்னர் 60 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை. பின்னர் அவர் மேற்கொண்ட முயற்சியால் 28.6 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன. 50 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசு 106 திட்டங்களை ஏழை மக்களுக்காக கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். வரும் 2018ம் ஆண்டு மே மாதத்துக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி செய்து தரப்படும். மீதியுள்ள இரண்டாண்டுகளில் உலகில் தலைசிறந்த நாடுகள் வரிசையில் இந்தியா இருக்கும்.
புதுச்சேரிக்கு மிகப்பெரிய திட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.

பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுவையை அண்மையில் அறிவித்துள்ளோம். மத்திய அரசின் ஆதரவோடு ரூ. 1850 கோடியில் இத்திட்டம் நடைமுறையில் வர உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் 1.25 லட்சம் வங்கி கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் 2516 கழிவறைகள் கட்டி தரப்பட்டுள்ளது. ஆறரை லட்சம் எல்இடி பல்புகள் தரப்பட்டுள்ளது. 65000 மக்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தில் ரூ. 130 கோடி தரப்பட்டுள்ளது. மின்இணைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 400 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது கூட புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான நிதியை அவர் பெற்று தரவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் 613 சத நிதியை புதுச்சேரிக்கு அதிகரித்துள்ளோம். புதுச்சேரி அரசு மீது குற்றச்சாட்டு ஏதும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் என்வாழ்நாளில் இதுபோன்ற மோசமான ஊழல் நிறைந்த அரசை நான் பார்த்ததில்லை .2018 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்குமா மின்சார வசதி செய்து தரப்படும் என்றார் அமித்ஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here