திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் 1/2நாள் தர்ணாவில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றது. இதில் சங்க தலைவர் திரு சந்திரன் நாட்றம்பள்ளி கிளை அவர்கள் தலைமை தாங்கி தர்ணாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர்கள் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளாவது;
1.மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்ப பெற அளிக்கப்பட்ட மனுக்களில் பல்வேறு நிலைகளில் மாவட்ட மாநில EMPOWER COMMITTEE அரசு மாநில கமிட்டிகளில் 20000 க்கும் அதிகமாக நிலுவையில் உள்ளன. இவற்றை அரசு தீர்த்து வைக்க வேண்டும்.
2.சட்டமன்ற தேர்தலின்போது அளிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான வாக்குறுதிகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
3.கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதி பெறும் வயதினை 80லிருந்து 70 ஆக குறைத்து நிர்ணயம் செய்து 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 01.04.2003 முதல் பணிநியமனம் பெற்ற அனைவரையும் பழைய ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.
உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஈடுபட்டனர்.
-S.மோகன்