சென்னை சென்று கட்சிப் பணிகளை தொடர்வேன் என்று ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் அவரது நண்பர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவரும் தலா ரூ.5 லட்சம் செலுத்துமாறும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டத்தை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து சென்னை புறப்படுவதற்கு முன்னர், செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார்.
அப்போது சென்னை சென்று கட்சிப் பணிகளை தொடர்வீர்களா? என்ற செய்தியாளர்கள் டிடிவி தினகரன் கேட்டபோது. “சென்னை சென்று மீண்டும் கட்சிப் பணிகளை தொடர்வேன். கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாருக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசுக்கு தமிழக மாநில அரசு பணிந்து செல்லவில்லை” என்றார்.
‘தினகரனை யாரும் ஒதுக்கவில்லை’
டிடிவி தினகரனை யாரும் ஒதுக்கவில்லை. அவர் கட்சி பணியை தொடரலாம். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.