அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத டிடிவி தினகரன் எப்படி கட்சி பணிகளை தொடர முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்,
”அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே தவறு என்று நாங்கள் கூறி வருகிறோம். அப்படி இருக்கும் போது அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி கட்சி நிர்வாகியாக இருப்பார். அவர் எப்படி கட்சி பணிகளை தொடர முடியும். டிடிவி தினகரன் கட்சி பணிகளை தொடர முடியுமா என்பதை அதிமுகவின் தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள்” என்றார்