திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுஒழிப்புத் துறையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மல்லகுண்டா பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை ஆங்காங்கே மறைவாக விற்கப்பட்டு வந்தன. குறிப்பாக கொரோனா ஊரடங்கின் போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெற்றது. மல்லகுண்டா ஊராட்சி தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் கள்ளச்சாராயத்தை தடுக்கும் பணியில் திம்மாம்பேட்டை காவல்துறை சிறப்பான முறையில் பணியாற்றி, தற்பொழுது மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச் சாராயமே இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகளும் சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட திம்மாம்பேட்டை காவல்துறைக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
-S.Mohan