ஆண்டிற்கு நான்கு முறை கூடும் கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் தரையில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை மனுவாகப் பெற்று, கூட்டத்திலேயே அதற்குரிய அதிகாரிகள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ஊராட்சிளில் உள்ள குடிநீர் சாலைவசதி போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் அதனை நிறைவேற்றும் தீர்மானங்களும் கிராம சபாவில் நிறைவேற்றப்படும். இதன்படி ஆண்டின் முதல் கூட்டத்திற்கு குடியரசு தினத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது . கூட்டத்தில் கோயான்கொள்ளை பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூட்டத்திற்கான எந்த அறிவிப்பும் எங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் கிராமசபா கூட்டத்தில் குறைந்தது 300 பொது மக்களாவது கலந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து கையெழுத்து போடுவோம் என்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.