செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் காவலர்

0
1529

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திம்மாம்பேட்டை காவல்துறையினர், 16.4.2020 வியாழனன்று கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட திகுவாபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (எ) பாப்பம்மாள் 35 எனும் பெண்ணை சாராய பாக்கெட் விற்பனை செய்யும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். பையில் மறைத்து வைத்திருந்த 100 பாக்கெட் சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிருபரிடம் எழுத்தராக பணிபுரியும் பிரபாகரன் (பொறுப்பு) எனும் காவலர் சரியான விளக்கம் அளிக்க மறுத்து காத்திருக்கும்படி செய்தியாளரை அமரச்செய்தார். செய்தியாளரிடம் நடந்துகொண்ட விதமும் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டார். சமுதாயத்தில் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறைக்கு காவல்துறை நண்பர் அளிக்கும் மரியாதை இதுதானா? கொரோனா பீதிக்கு நடுவிலும் அல்லும் பகலும் மக்களுக்காக உழைக்கும் மற்ற காவலர்களுக்கும் இது போன்ற சிலரின் நடத்தையால் கன்னியக்குறைவு ஏற்படுகிறது.

– மோகன், திருப்பத்தூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here