செல்போன் இல்லாமல் குழந்தைகளுடன் ஒருமணி நேரம் செலவிட வேண்டும்: பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்

0
1339

செல்போன் உட்பட மின் சாதனங்களின் பயன்பாடின்றி குழந்தைகளுடன் ஒருமணி நேரத்தை பெற்றோர்கள் செலவிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: குழந்தைகள் தினந்தன்று (நவம்பர் 14) இரவு 7.30 முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் அனைவரும் தங்கள் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

அந்தநேரத்தில் எவ்வித மின்சாதன பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். இந்த செயலை அன்றயை தினம் மட்டுமின்றி வாரம் அல்லது மாதம் ஒரு நாள் கடைபிடிக்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சென்று வழிகாட்டுதலை படிக்கும் பெற்றோர்களிடம் அது தொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். அதற்கு சரியாக பதில் அளிக்க பெற்றோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here