தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

0
1340

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி மூட்டையும் சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் வாங்க ரூபாய் 500/- ரொக்கமும் ஊட்ட சத்து மாவு 500 கிராம் மற்றும் முகக் கவசங்கள்  ஆகியவை தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கி.ராமசுப்பிரமணியன் ஆசிரியர் கல்வி டுடே, மாநில பொதுச் செயலாளர் முனைவர் ஆ.மவுரியன் ஆசிரியர் மக்கள் விசாரணை தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் வ.அருணாசலம் அவர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக திரு ஐ.விஜயன் DD பொதிகை உதவி  இயக்குனர் – செய்தித் துறை அவர்கள், திரு G.சத்யநாராயணன் அவர்கள் ஆசிரியர் பீப்பிள் டுடே. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ் பத்திரிகை எழுத்தாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில், பத்திரிகையாளர்களுக்கு  இன்று 25.05.2020 திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் பொருட்கள் வழங்கப்பட்டது.

இவர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் 10 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் நலிந்த பத்திரிக்கையாளர்களுக்காக  நலத்திட்ட உதவிகளுக்கு  பெரிதும் உதவியாக இருந்த மாநில பொருளாளர் S.சுப்பிரமணியன் அவர்கள்,  நம் சங்கத்தின் சட்ட ஆலோசகர் M.சுதாகர் அவர்கள், மாநில துணைத் தலைவர் K.ரமேஷ் குமார் அவர்கள், மாநில துணைச் செயலாளர் திரு V.யுவராஜ் அவர்கள் ஆசிரியர் கடல் துளிகள், மாநில செயற்குழு உறுப்பினர் திரு அழகர்சாமி அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு அனந்த கிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரின்  சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் உங்கள் தோழமையுடன் முனைவர் ஆ.மவுரியன் ஆசிரியர் மக்கள் விசாரணை மாநில பொதுச் செயலாளர் தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம், சென்னை-78.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here