நாட்றம்பள்ளி தாலூக்காவிற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் இன்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு K.C. வீரமணி அவர்கள் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர் பேசியதாவது: வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம் தொடர்ந்து 2வது முறையாக எனக்கு வாக்களித்து என்னை இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியுள்ளீர்கள் அதற்காக நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். உங்களுடைய பகுதிகளில் உள்ள குறைகள் என்னவாக இருப்பினும் அதனை என்னிடம் தயக்கம் இன்றி தெரிவியுங்கள் அதன்மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி நடவடிக்கை இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நானே பேசி அதற்கான காரணத்தை கேட்டு சரிசெய்து தருகிறேன் என்றார்.
மேலும் எனக்கு தலையாய கடமை ஒன்று உள்ளது அது என்னவென்றால் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம். தற்போது நாட்றம்பள்ளி நகரம் வரை கொண்டு வந்துவிட்டோம். அதனை அனைத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் இணைப்பு கொடுத்து குடிநீர் பிரச்சினை என்பதே இல்லாத பகுதியாக மாற்றிக்காட்டுகிறேன். அதனை செய்தால்தான் என் மனதுக்கு நிறைவான மனநிம்மதி கிடைக்கும் என்றார். மேலும் கூடிய விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
– S.மோகன், வேலூர்