புதிதாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏராளமான பயனாளிகளுக்கு அதற்குரிய ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் உடனுக்குடன் வாழங்கப்பட்டது, இந்நிலையில் சுமார் 5 முதல் 9 மாதங்கள் முன்பாகவே ஆணை கிடைக்கப்பெற்றவர்களுக்கும் இதுவரையில் பணம் கிடைக்கப்பெறவில்லையாம் இதனால் ஏராளமான முதியோர்கள் அன்றாடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு வருகின்றனர் இருந்தாலும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை என கூறுகிறார்கள் . இது சம்பந்தமாக முதியவர் ஒருவர் கூறுகையில் எனக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்க வில்லை இதற்காண காரணமும் எனக்கு முறையாக கிடைக்கப்பெறவில்லை இது போன்ற குளறுபடிகளை புதியதாக பதிவியேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி என்போன்ற முதியோர்களுக்கு உதவினால் அவருக்கு புண்ணியமாக இருக்கும் என்றார் ஏக்கத்துடன்.