திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சரண்யா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அரசு கோப்புகளை முறையாக பராமரிக்க தவறியதால் இந்த நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து கடந்த 23.04.22 சனிக்கிழமையன்று திடீரென்று திடீரென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து விஏஒக்களும் கூட்டமாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். செய்தியாளர்கள் அவர்களை அணுகியபோது அவர்கள் தெரிவித்ததாவது;
மட்றப்பள்ளி விஏஒ சரண்யாவை முறையான விசாரணையின்றி உடனடியாக பணியிடைநீக்கம் செய்ததை ரத்து செய்து அவரை பணியில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆணையிட வேண்டும் என்ற மனுக்களுடன் தாங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதற்காக காலை 11 மணிக்கு அலுவலகத்திற்கு வந்த விஏஒ-க்கள் இரவு 8 மணிவரை சுமார் 10 மணிவரை ஆட்சியருக்காகக் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. 50 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மாவட்டத்தில் ஆட்சியர் எப்பேற்பட்ட ஆய்வுப்பணிக்காகச் சென்றிருந்தாலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஏஒ-க்களும் ஆட்சியரைச் சந்திக்க அலுவலகத்தில் காத்திருக்கும் செய்தி ஆட்சியருக்கு இத்தனை மணிநேரம் தெரியாமல் போனது எப்படி ?

ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு சாண்றிதழ்களுக்காகக் மணிக்கணக்கில் காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பிய அவலம் உருவானது யாரால்? உடனடியாக விஏஒ-க்களை சந்தித்து அவர்கள் கோரிக்கை என்னவென்று கேட்க மாவட்ட ஆட்சியர் 10 மணிநேரம் தாமதித்தது ஏன்? இதில் ஏதும் பழிவாங்கும் நோக்கம் உள்ளதா என்ற கோணத்தில் மாவட்டத்தில் பணிபுரியும் சில வருவாய்த்துறை அதிகாரிகள் முனுமுனுத்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விஏஒ அலுவலகங்களில் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது மக்கள் செய்த தவறா? அல்லது மாவட்ட நிர்வாகத்தின் தவறா? அரசு பணி என்பது மக்களுக்கானது என்பதை அரசு அதிகாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே மாவட்டத்தில் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுபோன்ற தவறுகள் இனியும் நடக்காமல் இருக்க மாநில அரசு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமா? அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களால் அடித்தட்டு சாமானியர்கள் பாதிக்கப்படுவது எப்போது தடுக்கப்படும்? அரசு இயந்திரங்கள் மக்களுக்காக செயல்படுகிறது என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவ்வாதுமலைப் பகுதியில் நடைபெற்ற விபத்தில் பல மரணங்கள் நிகழ்ந்தது இதற்கு மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இரங்கல் செய்தி வெளியிட்டார் ஆனால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரோ காயமுற்ற நபர்களை வெகுநேரம் கழித்து தான் ஆறுதல் கூற வந்தார் என்று தினசரி நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-S.Mohan