பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கிடையே பணியாற்றி வந்த திருப்பத்தூர் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் குமரேசனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் சிவனீஅருள் அவர்கள். திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியது. இவ்விடத்தில் கோயில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது பயன்பாடுகளுக்காக அரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விடத்தில் சில நபர்கள் வீடு கட்டுவதற்கு ஆயத்தமானார்கள்.
இதைப்பார்த்த இப்பகுதி மக்கள் “இது பொது இடம். இங்கு எப்படி நீங்கள் வீடு கட்டுவீர்கள்” என கேட்கவே வீடு கட்டும் நபர்கள் எங்களுக்கு தனி தாசில்தார் பட்டா வழங்கியிருக்கிறார் என்றனர். உடனே கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் பார்வைக்கு புகார் சென்றது. விசாரணையில் தனி வட்டாட்சியர் குமரேசன் தன்னிச்சையாக பணம் பெற்றுக்கொண்டு பட்டா வழங்கியிருப்பது தெரியவரவே, மாவட்ட கலெக்டர் குமரேசனை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார் . கடந்த வருடம் கே.பந்தாரப்பள்ளி எனும் கிராமத்தில் இதேபோன்ற பிரச்சினை காரணமாக அப்பகுதி மக்கள் குமரேசனைகண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பலமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர், ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், அவர்களை இப்பகுதி மக்கள் புகழ்ந்து தள்ளினர். இதன்மூலம் பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனும் பழமொழி பலித்துள்ளது.
-S. மோகன்