திரப்பத்தூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை சில போலி மருத்துவர்கள் அதனை முறையான வழிகாட்டுதல்களின் படி அழிக்காமல் அப்படியே ரோட்டோரங்களிலும் அசு புறம்போக்கு இடங்களிலும் வெட்டவெளியில் வீசிவிட்டுச் செல்வதால் பொதுமக்களுக்கும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

போலி மருத்துவர்களை சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்பொழுது கைது செய்து வந்தாலும் ஆங்காங்கே ஒருசில போலிமருத்துவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இவர்கள் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளை என்ன செய்கிறார்கள்? அவை முறையாக அழிக்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க மாவட்ட அளவில் ஒரு சிறப்புக் குழுவை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அமைத்து சம்பந்தப்பட்ட போலிமருத்துவர்களை தண்டிக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.
போலிமருத்தூவர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அவர்களை முற்றிலுமாக அழிக்க முடியாமல் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. எனவே விலைமதிப்பில்லாத மனித உயிர்களோடு விளையாடும் போலிமருத்துவர்களை ஒழிக்க திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறையும் மாவட்ட ஆட்சியரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இம்மாவட்ட சாமானியர்களின் கோரிக்கை.
-S.Mohan