திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது கட்டு நடத்த புதிய விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் விதிப்பதால் விழாக்குழுவினர் கலக்கம்..

0
1103

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருதுவிடும் திருவிழா, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விடவும் அதிகமான எருது விடும் விழாக்கள் நடக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக இம்மாவட்டத்தில் நடந்துவரும் இவ்விழாவினை மாவட்ட நிர்வாகத்தின் சில புதிய விதிமுறைகளால் எருது விடும் விழா நடத்துவதில் விழாக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் தந்துள்ளது.
அப்படி என்னதான் விழா நடத்துவதில் பிரச்சினை என்று விழாக்குழுவை மக்கள் விசாரணை அனுகும்போது அவர்கள் தெரிவித்ததாவது;
மற்ற மாவட்டங்களில் எருது விடும் விழாவானது தங்குதடையின்றி நடந்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் விழா நடத்த வேண்டும் என்றால் 2லட்சம் டெபாசிட் செய்யுங்கள், விழா முடிந்த பின்னர் அத்தொகையை திரும்பி தரப்படும் என்று கூறுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் நம்மிடம் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விதிமுறைகளுக்கும் எதிராக உள்ள இதுபோன்ற முரணான விதிமுறைகளால் பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்து போகும் சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே விழா ஏற்பாட்டாளர்களின் தாழ்மையான கோரிக்கையாகவும் உள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொற்கால ஆட்சியை நடத்தி வரும் இவ்வேளையில் மாநிலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் விழா ஏற்பாட்டாளர்களின் கோரிக்கை.

-S.Mogan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here