திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக எருது விடும் திருவிழா நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருந்ததால், விழா ஏற்பாட்டாளர்கள் மிகுந்த கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் இதனைப் பற்றிய வருத்தம் அறிந்து திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ வுமான திரு க.தேவராஜ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா அவர்களுடன் கடந்த வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து விழா ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினார் பின்பு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் விழாவினை நடத்திக்கொள்ள ஒரு மனதாக முடிவு மேற்கொள்ளப் பட்டது ?
இதன்மூலம் எருது விடும் திருவிழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் காளை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் தங்கு தடையின்றி முறையான அனுமதி பெற்று போட்டிகளை நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பற்றிய செய்தி கடந்த வியாழனன்று மக்கள் விசாரணை பத்திரிகையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-S.Mohan