திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சர்வே எண் 1ல் அரசு புறம்போக்கு இடங்களில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் மற்றும் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற இடங்களில் குடியேறுவோர் மின் இணைப்பு பெறவேண்டும் எனில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் தடையில்லா சாண்று பெற்று சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அலுவலகத்தில் சமர்பித்தால் மட்டுமே மின் இணைப்பு பெறுவது சாத்தியம் ஆகும்.
இந்நிலையில் கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் மனு குருபவாணிகுண்டா அடுத்த கூட்லுபள்ளம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சர்வே எண் 1ல் தான் கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெற, நாட்றம்பள்ளி வட்டாட்சியராக அப்போது இருந்த சுமதி அவர்களுக்கு மனு அளித்தார். ஆனால் அவர் பல மாதங்களாக சம்பந்தப்பட்ட இடத்தை நேரிலோ அல்லது மனுதாரரை அழைத்தோ விசாரிக்காமல் இருந்துள்ளார். அவர் இடமாற்றம் பெற்று வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் சென்றதால் அதன்பிறகு வந்த மகாலட்சுமி என்ற வட்டாட்சாயரும் இம்மனுவின் மீதான விசாரணைக்கு நேரில் செல்லாததால் மனுதாரர் சந்தேகப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பலமாதங்களாக அலைந்துள்ளார். இறுதியாக கடந்த நவம்பர் மாதம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக ஊழியர் திருமதி வனிதா அவர்கள் மனுதாரர் கிருஷ்ணனிடம் தாங்கள் அளித்த மனு கிடைக்கவில்லை அதனால் தாங்கள் மீண்டும் புதியதாக மனு ஒன்றை போடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் மீண்டும் புதிய மனு ஒன்றை மல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று வருவாய் ஆய்வாளர் திருமதி நத்தினி அவர்களிடம் கொடுத்து இதுநாள் வரையில் காரணமின்றி வருவாய் ஆய்வாளர் அவர்களிடமே அந்த மனு கிடப்பில் உள்ளது எனவும் முறையாக விஏஒ விடம் அனுமதி பெற்று வரும் விண்ணப்பங்களை ஏன் இவர்கள் இப்படி? காலதாமதப் படுத்துகிறார்கள் என ஒன்றுமே புரியவில்லை என்கிறார்.
பாதிக்கப்பட்ட திரு கிருஷ்ணன் அவர்கள். வருவாய்த்துறையில் நடைபெறும் இதுபோன்ற குளறுபடிகள் தன்போன்ற பாமர மனிதர்களின் மனதை மிகவும் புண்படுத்துகின்றன எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அவர்கள் முறையாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் மனுதாரர் கிருஷ்ணன் அவர்கள். விஏஒ வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முறையான அனுமதி பெற்று இறுதியாக வட்டாட்சியரின் பார்வைக்கு வரும் மனுக்கள் மாயமாவதன் பிண்ணனி என்ன என்பதை மாவட்ட நிர்வாகம் தோலுரிக்குமா. இனியும் என்போன்று வேறு எவறும் பாதிக்கப்படக்கூடாது என்பதே மனுதாரரின் வேண்டுகோளாக உள்ளது.
-S.Mohan