நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி; தமிழக அரசு அறிவிப்பு

0
1016

சிறப்புமிக்கத் தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிடத் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பெயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 500 கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம்

  1. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினைப் புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும்.
  2. தனிப்பட்ட கலைஞரின் வயது 31.03.2022 தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

உறுப்பினர்-செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-600 028.
தொ.பே. 044 – 24937471.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.03.2022 செவ்வாய் மாலை 5.45 மணிக்குள் அல்லது அதற்கு முன்னரோ மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம்.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கும் திட்டம் (மன்றத்திற்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 15.03.2022)

  1. தனிநபர் விண்ணப்பதாரர் பெயர் :
  2. நீங்கள் மேற்கொண்டுவரும் கலைப்பிரிவு/ உட்பிரிவு
  3. தனிநபர் விண்ணப்பதாரர் முகவரி மற்றும் தொலைபேசி/ கைபேசி எண். (ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்) :
  4. (வயது வரம்பு 18 வயது முதல் 60 வயதிற்குள்) :
  5. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவராகவும், பதிவினைப் புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும். :
  6. எத்தனை ஆண்டுகள் வரை கலைப்பணி ஆற்றி வருகிறீர்கள்? :
  7. வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், IFSC எண் (ம) முகவரி :
  8. விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரம் (தனித்தாளில் இணைக்கப்பட வேண்டும் ) :
  9. நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி பெற்றுள்ளீர்களா? ஆம் எனில் பெற்ற நிதி விபரங்கள். :
  10. மன்றத்தில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி பெற்றுள்ளீர்களா? ஆம் எனில் அது பற்றிய விபரங்கள். :
  11. கலை நிகழ்ச்சிகள் நடத்தியமைக்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும். :
  12. இசைக் கருவிகள் சொந்தமாக உள்ளதா அல்லது வாடகைக்கு எடுக்கின்றீர்களா என்ற விவரம். அதற்கான ஆதாரம்? :

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மை என்றும், விதிமுறைகள் அனைத்தும் படித்து அறிந்து கொண்டதன் அடிப்படையில் விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவேன் எனவும் உறுதி கூறுகிறேன் என கையொப்பம் இட வேண்டும்.

-NV Sivashankar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here