திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், சோமநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மோனிஷா எனும் பெண் குழந்தைக்கு, கடந்த 05.02.2020 அன்று திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மோனிஷா எனும் காது கேளாத, வாய்பேச இயலாத பெண் குழந்தைக்கு மாவட்ட ஆட்சியரின் கைகளால் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி தொகை பெறுவதற்கான (தற்காலிக ஆணை) ஆணையை கிடைக்கப் பெற்றார். இந்நிலையில் கடந்த பத்து மாதங்கள் காத்திருந்தும் உதவித் தொகை கிடைக்கப் பெறாததால் கடந்த பத்து மாதங்களில் பல தடவை குழந்தையுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். அதற்கு அலுவலகத்தில் உள்ளவர்களின் ஒரே பதில் “பத்து நாளில் வந்து விடும். பொறுமையாக காத்திரங்கள்” என்பதுதானாம். இது ஒரு புறமிருக்க உதவித்தொகை பெறுவதை அரசு ஆன்லைன் முறைக்கு மாற்றி விட்டதாக அருகில் உள்எ நபர்கள் மூலம் மோனிஷாவின் தாய்க்கு தெரியவே, மீண்டும் ஆன்லைனில் கடந்த மாதம் மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் உடனடியாக தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி அவர்களுக்கு வந்ததும் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசு மருத்துவரால் 95% விழுக்காடு ஊனமுற்றவர் மேலும் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் ஆணை கிடைக்கப்பெற்றவருக்கு எப்படி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றும், இதுபோன்ற செயல்களால் அரசின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மக்களாகிய எங்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்றனர். இதனைப் போலவே இன்னும் ஏராளமான தற்காலிக ஆணைகள் செயல்படுத்தப் படாமல் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே மாநில அரசும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும் உரிய விசாரணை மேற்கொண்டு எனது மகளுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் கூறினார்.
-S,Mohan