கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் “முகக் கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 200/- ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இருந்தும் ஆங்காங்கே பொதுமக்கள் முகக் கவசமின்றி சுதந்திரமாக சுற்றித் திரிவதை நம் கண்ணால் காணமுடிகிறது. இன்று நாட்றம்பள்ளி நகரில் சென்னை கிருஷ்ணகிரி சாலையில் திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் திருமதி பூங்கொடி அவர்களின் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் நாட்றம்பள்ளி வருவாய் ஆய்வாளர் திருமதி சுமதி ஆகியோரின் மேற்பார்வையில், திரண்ட வருவாய்த் துறைக் குழுவினர் சாலையில் முகக் கவசமின்றி வந்தவர்களை பிடித்து ரூபாய் 200/- அபராதம் விதித்தனர்.
“இதுபோன்று மீண்டும் தவறு செய்யக்கூடாது” என்றும் “அரசின் வேண்டுகோளுக்கு பொதுமக்களாகிய நீங்களும் ஒத்துழைத்தால் தானே கொரோனா வைரஸை வெல்ல முடியும்” என்ற அறிவுரையையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதுபோன்ற நடவடிக்கைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் தொடர்ந்தால் கொரோனாவை வெல்வது சாத்தியமானதுதானே! பொதுமக்களே சிந்தியுங்கள்!.
-S.MOHAN