நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா, இந்திரா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

0
1447

நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா, இந்திரா நகரில் பட்டப்பகலில் (12 மணி) சித்ரா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது . சித்ரா 14.09.2019 அன்று காலை தனது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு அம்மா வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அவரது மாமியார் ராஜம்மாள் 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டார் மாமனார் சாமன் ஆடு மேய்க்க போய்விட்டார். இந்த நிலையில் சித்ரா தனது அம்மாவை பார்த்து விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்து 2 1/2 சவரன் செயின், 1/2 சவரன் மோதிரம், 3 1/4 சவரன் மோதிரம் 3, இடுப்பில் கட்டும் வெள்ளி அரைஞாண்கயிறு 3, பணம் 23000 ரூபாய் மற்றும் 4 சவரன் தங்க செயின். மல்லகுண்டா யூனியன் வங்கியில் அடகு வைத்த இரசீது ஆகியவை காணாமல் போயுள்ளதாக சித்ரா தெரிவித்தார். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவத்தால் மல்லகுண்டா பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்

– S.மோகன், வேலூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here