நாட்றம்பள்ளி அருகே அதிகாரிகளின் தவறால் நூறுநாள் ஊதியம் வேறுநபருக்கு சென்ற அவலம்…

0
1131

திருப்பத்தெர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சிக்கனாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கெளகாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி (53) இவர் கடந்த2021 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பல நாட்கள் வேலை செய்துள்ளார். ஆனால் ஆண்டு முழுவதும் வேலை செய்ததற்கான ஊதியம் இவருடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்துள்ளது. கல்யாணி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தபோது சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தாங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெரிவித்துள்ளோம் கூடிய விரைவில் ஊதியம் வந்து என்ற பதிலை மட்டும் சலைக்காமல் கூறி வந்துள்ளனர்.
ஆனால் ஆண்டு முழுவதும் ஏமாற்றமே அவருக்கு மிஞ்சியது கடைசியாக 2022 ஆம் ஆண்டுக்கான புதிய தேசிய ஊரக வேலைக்கான அட்டையும் கிடைக்கப்பெற்றுவிட்டார். பின்னர் அவரே நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்து சம்பந்தப்பட்ட கணிணி அலுவலகத்தில் தனது கடந்த ஆண்டுக்கான ஊதியம் முழுவதும் கிடைக்கவில்லை ஆகவே என்னவென்று ஆய்வு செய்து கூறும்படி தனது அட்டையை சமர்ப்பித்தார். கல்யாணியை சற்று நேரம் வெளியே அமரும்படி கூறிய அலுவலக ஊழியர்கள் அட்டையை தன்னுடைய பென்ச்சின் ஒரு ஓரத்தில் அட்டையை வைத்துவிட்டு வழக்கம்போல் தங்களுடைய பணியைச் செய்துள்ளனர். கல்யாணியும் வெளியே அமர்ந்து அலுவலக ஊழியர்கள் தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தார் அப்போது அலுவலகம் வந்த நபர் ஒருவர் ஏக்கத்துடன் அமர்ந்திருந்த கல்யாணியிடம் எதற்காக இங்கு காத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது நடந்ததை அவரிடம் கூற அந்நபர் சம்பந்தப்பட்ட கணிணி அலுவலகம் செல்லும்போது கல்யாணியின் அட்டை டேபிளின் மூலையில் கிடந்தது. உள்ளே சென்ற நபர் அப்பெண்ணின் பிரச்சினை என்னவென்று கேட்டபோது கல்யாணியின் அட்டையை எடுத்து ஆய்வு செய்தபோது அவருடைய ஊதியம் முழுவதும் சுமார் 18,791 ரூபாய் வேறொரு வங்கி கணக்கிற்கு சென்று விட்டதாகவும். அந்த வங்கி கணக்கு எண்ணை கல்யாணியிடம் கொடுத்து அந்நபர் யாரென்று சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்து அவரிடம் தனது பணத்தை எடுத்து தரும்படி கேளுங்கள் என்ற பதில் கிடைத்தது.அந்நபர் பணம் எடுத்துத் தர மறுத்தால் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் தருவார் அதனை தாங்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் கொடுங்கள் தங்களுடைய பணம் கிடைக்கும் என்றார்கள் அலுவலக ஊழியர்கள்.இது எதனை காட்டுகிறது சம்பந்தப்பட்ட கல்யாணி செய்த தவறு இதில் என்ன நூறுநாள் வேலைத்திட்டத்தில் அட்டை பெற விண்ணப்பிக்கும்போது உரிய அனைத்து ஆவணங்களையும் வாங்கிய பின்னரே பணியாளர்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது. அதனை முறையாக கணிணியில் பதிவேற்றாமல் விட்டது யார் தவறு? இது போன்ற குளறுபடிகள் நடப்பது ஆண்டு இறுதியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்களில் படாமல், நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி முறையிட்டும் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழித்த ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தவறு எங்கே நடந்து என்பதை முறையாக ஆய்வு செய்து தவறிழைத்த ஊழியர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..,? ஏற்கனவே பிரமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சம்பந்தப்பட்ட நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பயனாளர்கள் வீட்டின் மேல்தளம் வரை கட்டி முடித்தும் இன்னமும் அரசு சார்பில் 1ரூபாய் கிடைக்கப் பெறாமல் தவித்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். இப்படி குளறுபடிகளின் மையமாக திகழும் நாட்றம்புள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் தன் தவறுகளை திருத்தி சரியான பாதைக்கு திரும்புவது எப்போது?
கல்யாணி என்பவர் செய்த தவறு என்ன சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் செய்த தவறுக்கு கல்யாணியை இங்கும் அங்கும் சுற்றவிடுவது சரியா ? இதுபோன்ற அவலங்கல் மாறுவது எப்போது?.

S.Mohan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here