049 ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, நாட்றம்பள்ளி வட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (25.01.2021) 11வது தேசிய வாக்காளர் தினம் சிறப்பு நிகழ்ச்சி திருப்பத்தூர் சார் ஆட்சியர் திருமதி. வந்தனா கார்க் IAS அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
தேசிய வாக்காளர் தினம் குறித்து அங்கன்வாடி பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கோலங்கள் மற்றும் வாசகங்கள் சார் ஆட்சியரால் பார்வையிடப்பட்டது.
முன்பதாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ICDS பணியாளர்கள் மூலம் நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரையும், மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரையும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் மற்றும் பிரசுரங்கள் வழங்கியும் பேரணி நடைபெற்றது. பேரணியின்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளம் வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த அங்கன்வாடி பணியாளர்கள் ICDS மற்றும் SRDPS பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்புடன் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியத்தை நடனம், நாடகம் மூலமாக எடுத்துரைத்தனர்.
இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகளில் ஒருவரும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் மூத்த குடிமக்கள் இருவரும் நரிக்குறவர் குடும்பங்களில் சிலரும் குடுகுடுப்பை நபரும் வாக்களிப்பதன் அவசியத்தை சிறு வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்வின் இறுதியாக சார் ஆட்சியர் அவர்களால் இளம் வாக்காளர்களுக்கு புத்தகம், பூங்கொத்து வழங்கியும் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது தேசிய கீதத்துடன் இந்நிகழ்வு முடிவுற்றது.
இதில் திருமதி. லட்சுமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்), திருமதி. பூங்கொடி மண்டல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் திருமதி க. சுமதி வட்டாட்சியர், நாட்றம்பள்ளி, திரு. ஜி.பி. திருமலை தேர்தல் துணை வட்டாட்சியர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் வருவாய் அலுவலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்பாரதிதாசன் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இளம் வாக்காளர்கள் மூத்த வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.