நீட் விலக்கு தொடர்பாக ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

0
952

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு பாஜக உள்ளிட்ட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்ததும் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்தச் சூழலில் நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக நாளை (பிப். 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தினை 05.02.2022 (சனிக்கிழமை) அன்று காலை 11:00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கேட்டு, பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here