நெருங்கி வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?

0
1688

தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் தை மாதம் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து ஆங்காங்கே தமிழகத்தில் நடைபெறும். திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் அதிகமான மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறும். இங்கு ஜல்லிக்கட்டுப் பிரியர்கள் ஏராளம். இதுவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். உச்சநீதிமன்றத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனில் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல முடியும். கடந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அனைத்திற்கும் சென்றிருந்தோம். சில ஊர்களில் காளைகள் ஓடும் மந்தையில் தென்னை நார்கள் நிரப்பி வைத்திருந்நனர். சில ஊர்களில் அந்த முறை இன்றி வெறும் மண் தரையில் காளைகள் ஓடுவதை பார்க்க முடிந்தது காளைகளை எவ்விதத்திலும் துன்புறுத்தக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் விதிகளில் ஒன்று. ஆனால் காளைகளின் வால்பகுதியில் இரும்பினாலான கிட்டிகளை போடுவதை கண்ணால் காண முடிந்தது. முக்கியமான அம்சம் என்னவெனில் கடந்த முறை நாட்றம்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் ஓடும் பாதையிலேயே 4 அடி பள்ளம் இருந்தது. அதனை நிரப்பாமல் அதன்மீது சாதாரண சிமெண்ட் சீட்டை கொண்டு மூடிவைத்து விட்டு விழாவை நடத்தி முடித்தனர்

சாதாரணமாக ஒரு காளையின் எடை 250 கிலோ வரையில் இருக்கும் ஒடிவரும் வேகத்தில் காளையின் கால்கள் அந்த சிமெண்ட் சீட்டின்மீது பட்டால் காளையின் நிலை என்னவாகும். நல்ல வேளையாக ஒரு காளைகூட அந்ந பக்கம் வரவில்லை. காளைகளை சொந்த பிள்ளைகளில் ஒன்றாக நினைத்து வளர்க்கும் காளைகளின் சொந்தக்காரர்கள் காளைகளின் இழப்பு என்பது சாதாரணமாக இருக்காது. எனவே மாண்புமிகு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அவர்களே. இது உங்களுக்கான பதிவு புதிதாக உதயமாகியுள்ள இம்மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் இந்த வருடத்தில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கும் முறையான ஆய்வு செய்து அனுமதி தருவீர்கள் என நம்புகிறோம்.

-S.மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here