தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவைகள் தற்போது படிப்படியாக செயல்பாட்டிற்கு வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம் கோட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளின் வசதிக்காக திறக்கப்பட்டிருந்த நேரக் காப்பாளர் அறை அதற்குரிய அலுவலர் இல்லாததால் சில நாட்களாக மூடிக் கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் மற்றும் வயதானவர்கள் பேருந்துகளின் வழித்தடங்களை அருகில் இருக்கும் கடைகாரர்களை கேட்டுத்தான் உரிய பேருந்தில் பயணம் செய்ய முடிகிறது. உரிய அலுவலகம் திறந்தும் அலுவலர் இல்லாத அவல நிலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள நேரக் காப்பாளர் அறையை திறக்க வேண்டும் என்று நாட்றம்பள்ளி சுற்றுவட்டாரப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
-S.Mohan

















