நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மல்லரிப்பட்டி கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட இரண்டு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் உள்ள மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டு 8 மாதங்களாக சரிசெய்யாமல் ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால் இக்கிராம மக்கள் குடிநீருக்காக ஒரு மைல் தூரத்தில் உள்ள வெங்கடநாயனபள்ளி வரை நடந்து சென்று வரும் அவலம். இதைப்பற்றி சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் இக்கிராம மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுள் தலையாய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-S. Mohan