பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ராணுவ வீரருக்கு தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் ராணுவ வீரர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் பள்ளி மாணவி படிக்கும் பகுதி சென்று பள்ளி மாணவிக்கு தொந்தரவு செய்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ராணுவ வீரரை பிடித்து கம்பத்தில் கட்டி தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.