திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட குருபவாணிகுண்டா கிராமத்திலிருந்து முனியான்குட்டை பள்ளம் வரை சாலை அமைக்கும்படி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சாலை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ஊராட்சி நிர்வாகம் ஆரம்பித்தது. பல நாட்களாக சாலைவேண்டி ஏகத்தில் இருந்த முனியான்குட்டை பள்ளம் மக்கள் சாலை போடும் பணி நடப்பதைப் பார்த்து நிம்மதியாக இருந்தனர். ஆனால் திடீரென்று கடந்த இரண்டு மாதங்களாக இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் அரைகுறையாக நின்ற சாலைப்பணியால் தங்கள் வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலைகளை முழுவதும் ஆக்கிரமித்துள்ளதால் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றனர். நெடுநாட்களாக சாலைவசதி கேட்டு போராடிய இப்பகுதி மக்கள் பாதியில் நின்ற சாலைப்பணியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி சாலைப்பணியை முடித்து வைப்பார்களா?
-Mohan.S