சென்னை: தமக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் 5 பேருக்கு அமைச்சர் பதவி தருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அமைச்சர் பதவி கேட்டு பல கோஷ்டிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் 11 எம்.எல்.ஏக்கள் கோஷ்டியாக திரண்டனர். அவர்களை அமைச்சர் செங்கோட்டையன்தான் வழிக்குக் கொண்டு வந்தார்.
தோப்பு கோஷ்டி பின்னர் தோப்பு கோஷ்டி களத்துக்கு வந்தது. மாஜி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பனும் இந்த கோஷ்டியில் இணைந்து கொண்டு அமைச்சர் பதவி கேட்டு கலகக் குரல் எழுப்பினர்.
தோப்பு கோஷ்டி பின்னர் தோப்பு கோஷ்டி களத்துக்கு வந்தது. மாஜி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பனும் இந்த கோஷ்டியில் இணைந்து கொண்டு அமைச்சர் பதவி கேட்டு கலகக் குரல் எழுப்பினர்.