புறம்போக்கு நிலத்தில் மூன்று தலைமுறைகளாக வாழும் குடும்பம் இதுவரை பட்டா கிடைக்கல…

0
1462

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்காவிற்குட்பட்ட மல்லகுண்டா முனியான்குட்டைப் பள்ளம் செல்லும் வழியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கடந்த 250 வருடங்களாக மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். மொக்கு என்பவரின் குடும்பத்தினர் இந்த வீட்டிற்கு மின்சார இணைப்பும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் “பலமுறை அரசிடம் குறைந்த பட்சம் மூன்று சென்ட் வீட்டுமனைப் பட்டா கிடைக்க கோரிக்கை வைத்தேன் ஆனால் இதுவரை கிடைத்தபாடில்லை. எனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எனக்கு சொந்தமாக ஒரு அங்குல பட்டா நிலம் கூட இல்லை. ஆனாலும் இந்த வீட்டிற்கு பட்டா வழங்க மறுக்கப்படுவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு சுமார் 75 வயதாகிறது. இன்னமும் இதற்கான கோரிக்கை போராட்டம் தொடர்வது மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது. ஜனநாயக நாட்டில் என் போன்ற ஏழைகளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குலைப்பதற்கு சமம். ஒரு அங்குல பட்டா நிலம் கூட இல்லாத எனக்கு பட்டா வழங்க மறுக்க காரணம் எதனால்? ஆகவே உயர்திரு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த தாழ்மையான கோரிக்கைக்கு செவிசாய்த்து பட்டா கிடைக்கு வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

இதுபோன்று மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் மூவாயிரம் ஏக்கர் அரசு புறம்போக்கு இடங்களில் பரவலாக ஆங்காங்கே வீடுகட்டி குடியேறியுள்ள குடும்பத்தினர் ஏராளமாக உள்ளனர். அதற்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த கோரிக்கை மனுக்களும் நாட்றம்பள்ளி வட்டாட்சியரிடம் இன்னமும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-S.Mohan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here