பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி மாயவலையில் சிக்க வைத்த இளைஞர் சிக்கினான்: போலீசார் தீவிர விசாரணை

0
1386

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே இளம்பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் எஸ்.எம்.எஸ் பதிவு செய்து பெண்களை மாயவலையில் சிக்க வைத்த திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராஜூ மகன் வினோத் (வயது 24) என்ற இளைஞர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஏதோ ஒரு நம்பரை அழுத்தி ட்ரூகாலர் இல் பெண்கள் பெயர் வந்தால் அந்த நபருடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய புகைப்படங்களை பெற்று அதை வைத்து மிரட்டி பல்வேறு ஆபாச புகைப்படங்களை அனுப்பி உள்ளார். இதுபோன்று நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நாட்றம்பள்ளி ஆய்வாளர் திரு. இருதய ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கமலக்கண்ணன் மற்றும் சரத்குமார் ஆகியோர்களால் சென்னையில் பதுங்கியிருந்த வினோத்தை கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தற்போது வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களை மாயவலையில் சிக்க வைத்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மற்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பெண்களுக்கு மட்டும் ஆபாச வீடியோக்களை அனுப்பியது தெரியவந்ததை தொடர்ந்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடைய செல்போனை ஆராய்ந்ததில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

-முருகம்மாள், செய்தியாளர், திருப்பத்தூர் மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here