கொரோனா எனும் கொடிய வைரஸால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் குறித்த செய்திகள் சில தினசரி நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளதால், யார் போலி மருத்துவர், யார் உண்மையான மருத்துவர் என்பதை அறியாமல் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஆழ்த்தியுள்ளது. இது போன்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரும் மாவட்ட சுகாதாரத்துறையும் மாவட்டத்தில் உள்ள போலி மருத்துவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே இம்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முத்தூர் எனும் கிராமத்தில் இயங்கி வந்த போலி மருத்தவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள போலி மருத்துவர்கள் மீது மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
-Mohan.S