மக்கள் விசாரணை பத்திரிகையின் 8-ம் ஆண்டு விழா 22-12-2018 அன்று விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மக்கள் விசாரணை ஆசிரியர் முனைவர் ஆ.மவுரியன் தலைமை தாங்கினார். அப்பொழுது அரசியல் தீர்ப்பு மாத இதழ் மற்றும் ஆ.மவுரியன் எழுதிய “சர்கார் உத்யோகம்” என்ற நாவல் வெளியிடப்பட்டது.
மேலும் 5 சிறந்த பத்திரிகையாளருக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை 2000 ரூபாய் வழங்கப்பட்டது. பீப்பிள் டுடே சத்யநாரயணன், நமது நகரம் சரவணன், மதி ஒளி ராஜா, அரசியல் முத்திரை செல்வம், அதிரடி குரல் ஜெயகாந்த், தொட்டில் செய்தி முருகேசன், பகுஜன் குரல் ஜெகதீசன், சட்ட கேடயம் ராஜன், கடல் துளிகள் யுவராஜ், புரசை எக்ஸ்பிரஸ் பிரபாகரன், பாக்கியம் சினிமா விஜய் முருகன், அதிரடி தீர்ப்பு சீனிவாசன், முள்ளும் மலரும் மற்றும் மக்கள் விசாரணையின் இணை ஆசிரியர் க்ஷி.அருணாசலம் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் கலந்துகொண்டு மக்கள் விசாரணை பத்திரிகைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.