திருப்பத்தூர் மாவாட்டம் நாட்றம்பள்ளி தாலூக்காவிற்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக உள்ளது. இவ்வூராட்சியின் மக்கள்தொகை சுமார் பதினைந்தாயிரம் வரை இருக்கும். கிழக்கே இராமநாயக்கன் பேட்டை முதல், மேற்கில் ஆந்திர மாநில எல்லை வரையும் தெற்கே காமராஜர் நகர்முதல், வடக்கில் பாலாறு வரையில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி மற்ற ஊராட்சிகளைப்போல சமமான நிலப்பரப்பின்றி மேடுபள்ளங்கள் நிறைந்த நிலப்பகுதிகளிலும் மலைப்பாங்கான இடங்களிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஊராட்சியில் ஒரு சிறிய அளவிலான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் இப்பகுதி மக்கள் மகப்பேறு மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காக எட்டு கிலோமீட்டரில் உள்ள நாட்றம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு வரவேண்டும். வரும் வழியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் ஏதும் சொல்வதற்கில்லை.
மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் குருபவாணிகுண்டா வரை வந்தபிறகுதான் பேருந்து வசதியே கிடைக்கும். இப்படிப்பட்ட மலைப்பாங்கான இடங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்காகவாவது தமிழக அரசும் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறையும் இவ்வூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கத் தேவையான நடவாடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் அரசு அங்கீகாரம் இல்லாத போலிமருத்துவர்களிடமிருந்து பொதுமக்களை அரசு காத்திட இயலும். அடிப்படை வசதிகளில் ஒன்றாக இருக்கும் மருத்துவ சேவை சமூகத்தின் அடித்தட்டு மனிதன் வரை சென்று சேர்வதை அரசும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறையும் உறுதிப்படுத்த வேண்டும்தானே.
-S.Mohan