வேலூர் மாவட்டம் மல்லகுண்டா ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது . இதில் ஊராட்சியின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்கள் மூலம் தெரிவித்தனர் மனுக்களை பெற்றுக்கொண்டு அதன்மீது நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார். மேலும் ஆண்டு வரவு செலவுகள் பார்க்கப்பட்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களின் பிரதான பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை இருந்தது.
– S.மோகன், வேலூர்