நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் சிறப்பு அம்மா திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் திரு. சிவன் அருள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குறைகளின் மீது உடனடியாக நடைவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறினார். முன்னதாக கலெக்டர் அவர்கள் முகாம் நடைபெற்ற மல்லகுண்டா அரசு ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த அவர். நேராக பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளில் சரியாக குடிநீர் வருகிறாதா என ஆய்வு செய்தார். பின்பு ஊராட்சி செயலாளர் குமரேசன் அவர்களிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். பின்னர் கொய்யா மற்றும் மாதுளை போன்ற மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டார். வீட்டு மனைப்பட்டாக்கள் மற்றும் சாதிச்சாண்றுகள் மற்றும் வருமான சாண்றுகள் போன்றவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் திருமதி உமா ரமணி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவனேசன். விஏஓ சரவணன் மற்றும் கிராம் உதவியாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-S.மோகன், திருப்பத்தூர்