புதியதாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் வெகுநாட்களாக அரசிடம் வைக்கப்பட்டு வந்த இப்பகுதி மக்களின் கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையை சில நாட்களுக்கு முன்பாக மக்கள் விசாரணை பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதன் பலனாக தாசிரியப்பனூர் உள்ளிட்ட பதினான்கு கிராமங்களில் அரசு மினி கிளினிக்குகள் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் திரு கே சி வீரமணி அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் இப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அடிப்படை வசதிகளில் தலையாய ஒன்றாக கருதப்படும் மருத்துவ வசதியை தங்கள் கிராமம் வரை கொண்டு வந்து சேர்த்த அமைச்சர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் வாழ்த்த தெரிவித்தனர்.
-S.Mohan