மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 தடுப்பூசி கிடைப்பது குறித்த நிலவர அறிவிக்கை

0
823

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி தரும் வேகத்தை விரைவுபடுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாடு தழுவிய கோவிட் 19 தடுப்பூசி 16 ஜனவரி 2021 அன்று தொடங்கியது. அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் புதிய கட்டம் ஜூன் 21, 2021 முதல் தொடங்கப்பட்டது. தடுப்பூசிகள் அதிக அளவில் கிடைப்பது, மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளின் இருப்பு நிலையை முன்கூட்டியே தெரிவிப்பது, சிறந்த திட்டமிடல் மற்றும் சப்ளை சங்கிலித் தொடரை ஒழுங்கு படுத்துவது ஆகியவற்றின் மூலம் தடுப்பூசி இயக்கம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் இந்திய அரசு அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் புதிய கட்டத்தில், நாட்டில் தடுப்பூசி உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75%த்தை அரசு கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கும்.

தடுப்பூசி டோஸ்கள்:

(பிப்ரவரி 1, 2022 நிலவரப்படி)

வழங்கப்பட்டவை 1,64,79,42,695

இருப்பு உள்ளது11,92,78,591

இதுவரை 164.79 கோடிக்கும் அதிகமான 1,64,79,42,695 தடுப்பூசிகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் மற்றும் நேரடி மாநில கொள்முதல் வகை மூலம் வழங்கப்பட்டுள்ளன.

11.92 கோடிக்கும் அதிகமான (11,92,78,591) இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத கோவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இன்னும் உள்ளன.

-PIB News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here