தமிழ் பத்திரிகை எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் சென்னை ஜி.ஏ.ரோடு. பழைய வண்ணாரப்பேட்டையில் 18-02-2018 அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்தவர் மாண்புமிகு டி.ஜெயகுமார், அவர்கள், (மீன்வளத்துறை மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர்).
சிறப்பு விருந்தினராக சென்னை பத்திரிகை பதிவு அலுவலகத்தின் முன்னாள் துணை பத்திரிகை பதிவாளர் மற்றும் தூர்தர்ஷன் இணை இயக்குனர் திரு.I.விஜயன் அவர்கள். தமிழ் பத்திரிகை எழுத்தாளர் சங்கத்தின் மாநில தலைவர் காசி அரங்கநாதன், மாநில பொதுச் செயலாளர் ஆ.மவுரியன் மற்றும் மாநில பொருளாளர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு கண் மருத்துவமனை முன் வந்து இத்தைகைய மருத்துவ பரிசோதனையை நேரடியாக வந்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பதால் இந்த வாய்ப்பை பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இம்முகாமில் 27 பேர் இலவச கண் அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் இலவச கண் சிகிச்சை மட்டுமல்லாமல் அக்குப்பஞ்சர் மருத்துவர்களும் வந்து இலவசமாக சிகிச்சை வழங்கினார்கள். இந்த முகாமில் அறுவை சிகிச்சிக்கு கண்டறியப்பட்டுள்ள 27 பேர் சென்னை எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனை செலவிலேயே அழைத்துச் செல்லப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முகாமிற்கு தமிழ் பத்திரிகை எழுத்தாளர் சங்கத்தின் மாநில கௌரவத்தலைவர் R.R.சண்முகவேல் தலைமை ஏற்க, மாநில கௌரவ செயலாளர் K.ரமேஷ்குமார், மாநில துணைத் தலைவர் V.அருணாசலம், ராம சுப்பிரமணியன், K.பாலாஜி. மாநில பொதுக்குழு உறுப்பினர் D.ரவி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.