மாயமாய் போன மயானத்தை மீட்டுத்தரக்கோரி போராட்டம்

0
985

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ளது செருவுகிந்தனப்பள்ளி கிராமம் இங்கு சுமார் 50 குடும்பத்தினர் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் இவர்களுக்கென்று தனியாக மயானம் இருந்துள்ளது இந்த மயானத்தில்தான் வழக்கமாக இறந்தவர்களின் உடல்களை புதைத்தும் தகனம் செய்தும் வந்துள்ளனர் இக்கிராம மக்கள். இந்நிலையில் கடந்த சில மாதம் முன்பு இறந்வரின் கல்லறைக்கு பூஜை செய்ய ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர் அவர்களை அதே பகுதியைச்சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தாருடன் கடுமையாக எதிர்த்துள்ளார் , இச்சம்பவாம் பற்றி ஏற்கெனவே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் உள்ளது.

இந்நிலையில் திடீரென்று ராமமூர்த்தி JCB இயந்திரம் மூலம் மயானத்தை சமன்செய்து சுடுகாடு இருந்ததற்கான தடயம் இல்லாமல் மாற்றிவிட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேருடன் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக 17.12.2019 செவ்வாய் அன்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வட்டாட்சியர் உமா ரம்யா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட மயானம் இருக்கும் இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர் . போராட்டம் காரணமாக வாட்டாடீசியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here